ஆசையாக 
நான் ஏறி அமர்ந்த துலாத்தட்டு
அசையாமல் ஆயிற்று

எடையின்மை கூடிய
ஓர் அசைப்பில் கண்டுகொண்டேன்

கொடுத்தாலும்
வாங்கினாலும்
குதூஉகலமாய் ஆடிற்று
என் ஊஞ்சல்