உன் முகம்
ஒரு குழிக்குள்
தன் மூக்கை நுழைத்திருந்தது.
ஜென்ம வாசனையால் உந்தப்பட்டு
புராதானமான அந்த பணிக்குள்
தன்னை
மேலும் ஆழமாக செலுத்தியது
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட
கட்டுப்பாட்டு அறையில் நிற்கும்
ஒரு அதிகாரியை போல
நான் உன் பின்புறம் நின்றேன்
நல்லவேளை
உன் முதுகிலிருந்து
நம் ரகசிய தந்திக்கம்பி வேலை செய்தது
அது மேல் நோக்கி எழும்பி நின்றது
..ஆம்.. இங்கு தான்....நெருங்கி விட்டோம்…
…இல்லை... இது இல்லை....
அவரசத்தில் வலமும் இடமும் தொடாமல் ஆடியது
இப்போது இடம்வலமாக மெல்ல அசைகிறது
...எப்படி தப்பித்திருக்க முடியும் ..?
மீண்டும் விரைத்தெழுகிறது
இதோ.. இங்கு..
அசைவே இல்லாமல் உறைந்திருக்கிறது
...........
தந்தி ஒரு சமன் நிலையை அசைக்கும்போது
உன் முகம்
தன் வேலையை முடித்துவிட்டிருக்கும்