28
நடந்து பழகிய அவளோ ஒளிந்து விளையாடினால் அவள் பாத தடம் நான் காண்பது எங்ஙனம்?
அவள் சென்ற வழியறியாது நான் சேருமிடம் சேர்வது எங்ஙனம்?
செல்லுமிடம் சேராது அவளை கண்டுகொள்வது எங்ஙனம்?
நடப்பதெல்லாம் ஒளிந்து கொள்ளத் தானா? ஒளிந்து கொள்ள நடந்தாக வேண்டுமா? உன் பாதங்கள் நோகுவதில்லையா?
இருந்த இடத்திலேயே ஒளிந்து கொள்ள கூடாதா? ஒளிந்து கொள்ள இத்தனை தூரம் நடந்தாக வேண்டுமா? எத்தனை தூரம் தான் நடந்தாலும் தன்னிடமிருந்து ஒளிந்து கொள்ள முடியுமா?
என்னவனே.. கேள்…
நான் ஒளிந்து கொள்வதே யாவையும் காணத்தான்.
நான் இருந்தால் யாருமே என்னருகே வருவதில்லை. ஆகையால் நான் ஒளிந்து கொள்கிறேன்.
ஒளிந்து கொள்வதாலேயே நான் என்னை தேடுவதில்லை. ஆனால் நீ தேடுகிறாய் அல்லவா என்னை. தேடுவதால் தானே நீ என்னை கண்டும் கொள்கிறாய்.
உள்ளதனைத்தும் ஒளிந்து கொள்வதவனாலேயே நான் இப்புவியை கண்டு கொள்கிறேன்.
என்னவனே.
தேடுவது வெறுமனே திரிவது அல்லடா
அதுமொரு விளையாட்டு..
அரண்டவன் எதையும் தேட முடியாது.. விளையாடுபவனோ தேடுவதனைத்தையும் கண்டு கொள்கிறான்.
கண்ட பின்பும் அவன் வீடு செல்ல விரும்புவதேயில்லை. விளையாட்டை நிறுத்துவதும் இல்லை.
நானோ என் பேரின்ப வீட்டிலிருந்த படியே ஒளிந்து விளையாடிக் களிக்கிறேன்.
29
விளையாடடி என் செல்வமே !
உன் ஈரத் தடங்களை நானே அழித்தேன். உனை யாரும் கண்டு கொள்ள முடியாது என் மகளே என சிரித்தது கதிரவன்.
உன் மண் தடங்களை நானே அழித்தேன. உனை யாரும் பின் தொடரப் போவதில்லை என் மகளே என மகிழ்ந்தது காற்று.
தேவி ! உன் பாதவொலிகள் யாருங் காணாமல் என்னிடமே வைத்திருப்பவன் நான் என்றது வெளி.
காட்டெரியே ! உன் கால் தடம் அழித்தது நானே என் அவள் காதில் முனகி சென்றது மழைமுகில்.
நீ தவறி செல்லும் தடங்களை உன் பாதம் தேரும் முன்பே எரித்தழிப்பது நானே என்றது அவள் காதில் ஒரு நெருப்பு.
அப்படியாயினும் அவன் உன்னிடம் சேர்வதை நிறுத்த முடியாதென அறிக நீ.
மண்ணிலிருந்து அவன் நோக்குவது மேலுள்ள ஆகாயத்தை அல்ல மகளே..
அவன் நோக்குவது உன் தடத்தை கூட அல்ல.
அவன் நோககுவது உன் பாதங்களின் வளைவை. அவ் வானவளைவு அவனுக்கு காட்டுகிறது உன் திசையை.
அதிலுள்ள நட்சத்திரங்கள் சொல்கிறது நீ ஒளிந்திருக்கும் இருளடைந்த முடுக்குகளை.
அதில் எழுகிறது அவன் கதிரவன். அக்கிதரவன் இயம்பித் தருகிறான் உன் பாதங்களின் ஈரத்தை.
இமை தாழ்த்தி குனித்து நிலத்தில் ஒருவன் காணும் ஆகாயத்தை மறைக்க எங்களுக்கு ஒப்புதல் இல்லை என் செல்லமே.
இங்குவரை உடன் வந்தவன் அவன் அல்லவா? அவனன்றி உனை அறியும் ஆள் உண்டா?
சுடர் ஒளிந்து கொள்ள ஏலாதம்மா.. அவனோ எதையும் பற்றியிருக்காத குளிர்ந்த மண்ணகழ். உனை கண்டு பொருத்தி கொள்ளும் ஊழ் அவனுக்கு.
அகழ் பொருத்தாவரை இருட்டில் அவனோடு விளையாடிய களிப்பே நமக்கு. அகழ் எரியும் போது சுடெரெல்லாம் சுற்றி இருப்பவர்க்கு..
சுடரெல்லாம் சுற்றி இருப்பவர்க்கு!!!








One response to “குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 11”
[…] அடுத்து […]