-
Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 619 அம்மாவுக்கும் அவள் அம்மாவுக்கும் அம்மாவானவர்கள் எல்லோருக்கும் வந்தது அவர்களை ஆள் செய்விக்கும் ஓராள். டேய். அதை அம்மா சொல்ல வேண்டும். அன்றெல்லாம் என்னோடு விளையாடியவன் நீ. நமக்கு ஆள் என நாம் இங்கு வந்தோம். அதையொன்றும் நாம் மறைக்க வேண்டியதில்லை. மற்றும் இந்த கதையோடு நீ சேர்வது எனக்கு பிடிப்பதில்லை. அவனுக்கு நிறைய புழுகினிகளே நண்பர்கள். நாம் அப்படியா? நின்னோராவில் நமக்கு உண்மையும் பொய்யும் சொல்லத் தெரியாது. பூமியில்…
-
Continue reading →: விசும்பின விசும்புகள்24காலை போதில்தினம் உன் பிரகாரம்வந்து நிற்கிறேன் தகிக்கும் வேளைநோக்கித் தீரவில்லைஉன் நிர்வாணம் அந்தியில்ஏக்கமும் துயரமுமாய்வீடு திரும்புகிறேன் திரை மூடியயாமமறியாமல்நாம் கூடினது வெளி வைகறைநாம் எழுந்தருள்வது உன் கருவறை 25 இருளில்தன்னைஇலையிலையாய்சொட்டித் தீர்க்கிறதுமரம்
-
Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 517 பூமியில் உயிர்கள் பெறவதனைத்தும் வேறொன்றின் எச்சில். மண் புழுதன் எச்சிலையே இப்பூமி உண்கிறது. சூரியனின் எச்சிலே இலைகள் உண்ணுவது. இலைகளின் எச்சிலே பூவாகி பூமியில் கொட்டுகிறது. புள் பூண்டு எச்சிலே கனிகளில் வன்னமிக்கிறது. கனிகளின் எச்சிலோ ஊன் ஆகிறது. விலங்குகளின் எச்சிலே ஊண் என நாக்கில் சுவைகிறது. மானிடரின் எச்சிலே மண் வாயில் இனிக்கிறது. எச்சிலே முத்தம். எச்சிலே அமுதம். எச்சிலிலிருக்கிறது உயிர்தொகை. எச்சிலிலிருக்கிறது புவி வாழ்வு. அவள்…
-
Continue reading →: ஒரு தொடுகை பேசி கொண்டோம்20இத்தனை ஆயிரம்நாவுகளால்நக்கி விடுகிறது மரம். துவட்டிக் கொள்ளமற்றுமொரு மரத்திடம்ஓடிச் செல்கிறதுகாற்று 21என் முதுகில்முடியடர்ந்த உன் வால் வேண்டும் ஒருமுறையேனும்நானதை ஆட்டிப் பார்க்க வேண்டும் 22 ஆம் இங்கு எதுவுமிலைஎது வரினும் அதுவுமிலை தேம்பியழுது காற்றிலென் கூந்தலாடவே வந்தேன். எனக்கிங்கு ஏதுமிலை 23 நெடுநேரம்நம் சொற்கள்அங்குமிங்கும்இங்குமங்கும்ஓடியதில்நாம் பேசி கொள்ளவில்லை தனித்து வரும் வழியிலொரு தொடுகை பேசி கொண்டோம்
-
Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 414 ஆழியிருள் ஒளியலை. இருளில் துவங்குகிறதனைத்தும். அலையில் வந்து சேர்கிறதனைத்தும். இருள் ஒரு கரு என அறிக. அதிலிருந்து கொணர்வதே ஒளி என கொள்க. நான் இருள் காணாது இங்கு வந்தேன். வந்தவிடத்தில் இருள் காணவும் ஒளி பேணவும் நின்றேன். ஆம் இருளிலாது இவ்வுலகிலை. என் இருள். அவன் இருள். முடிவிலி இருள். கனவில் தோன்றும் இருள் நோக்கி நான் என் கையசைப்பேன். விழிப்பில் தெரியும் ஒளியை கையணைப்பேன். இருளும்…
-
Continue reading →: தன்னைத்தான் சிமிட்டுகிறது மின்மினிகாடு16திடுமெனஎதிர் வருவோரை காட்டி யாரிவர் எனக் கேட்டாய்தடுமாற்றத்தில் நான்தெரியாதென பொய் சொன்னேன் 17 இரவின்முடிவிலா ஆடியில் தன்னைத்தான் சிமிட்டுகிறதுமின்மினி காடு18 ஆளற்ற தென்னந்தோப்பிற்குள்தனித்து விடப்பட்டிருந்ததுஒரு வாட்டர் ஆப்பிள். எடுத்து கடிக்கவும் மனமில்லை.சிரித்து சிவந்த முகமோமிகச் சிறியது. அதன் அம்மாஅருகில் இருப்பது போலவும்தெரியவில்லை காக்கையோ குருவியோதவற விட்டதென்றால்கொடுத்தனுப்ப வேண்டியதுமில்லை கூட கூட்டி போகவும் வழியில்லை.வீடென்றால் அதற்கு புழுக்கம் உண்டாகலாம். யாரிடம் கொண்டு சேர்ப்பதுநம்செல்ல குட்டியை
-
Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 311 நான் தான் இந்தக் கதை பேசுகிறேன். விட்டால் என்னை கண்டு கொள்ளாமல் இப்படியே மாறி மாறி புகழ்ந்து தள்ளுவார்கள் இப்பூமியை. இனி கதையை கதை தான் தள்ள வேண்டும் போலிருக்கிறது. அவரவரை பற்றி பேசும் ஆவலில் கதை சொல்பவர்கள் எப்போதும் என்னை மறக்கிறார்கள். இம்முறை என்னை சொல்ல நானே வந்திருக்கிறேன். இவர்களை இங்கேயே சுற்ற விடுவது நல்லதல்ல. பொறுப்பற்ற இந்த புது பூமிவாசிகளை எதையாவது காட்டி என்னை நோக்கி…
-
Continue reading →: முத்தமிடும் நேர்கோடு13சொற்கள்மன்றாட்டுக்கெனவிளையாட்டுக்கெனநீ அளித்த பாவைகள்இறைவனுக்கரசேநம் பாவைகள் மேல்பொருட்களை ஏற்ற வேண்டாமெனஎம் பெரியோரிடம் சொல்வீரா?14வளைந்து வளைந்துசெல்லும் நேர்கோடுவழியில்நிறுத்தி நிறுத்திமுத்தமிடுகிறதுபார்க்குமனைவரையும்.15தூரத்தில்கருப்பும் சிவப்புமான ஒரு பொட்டுமும்பரமாய் வேலை பார்த்துக் கொண்டிருந்தபூச்சி மருந்து மெசினைசுற்றி சுற்றி பறக்கிறதுகுளவியாய் இருந்தால்கூடு கட்டஓர் இடுக்கு தேடலாம்தேனீயாய் இருக்காதெனசொல்வதற்குஇன்னும் அவ்வளவு நெருக்கமாக செல்லவில்லைநான்
-
Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 26 இது நான். அதாவது அவன். நின்னோராவில் அப்படியொன்றும் அழகிய பெயரில்லை எனக்கு. அவள் இந்த பூமிக்கு வந்த கணமே எனக்கு அப்பெயரை அளித்தாள். அதன் பொருட்டே அவள் மண்ணிலிறங்கும் வரை நான் என் முன்னிருந்த எச்சாளரமும் திறக்காதிருந்தேன். அதன் வழி எனக்கு வேறு பெயர் வந்து விட்டால்? யாத்திரையில் இருப்பவனுக்கோ பெயரில்லை. பாலையின் நடுவிருக்கும் குளிர்ந்த கல்மண்டபம் எனக்கு அப்பெயர். அதிலேயே தங்கி அதையே நாவில் தொட்டு முகர்ந்து…




