கருப்பு க்ரையானும் வெள்ளை க்ரையானும்
















கருப்பு க்ரையானும்
வெள்ளை க்ரையானும்
மல்லுக் கட்டிக் கொண்டன

எதிராளியின் குருதி
தன் நிறத்தில் வழிவது கண்டு
மேலும் மேலும் குத்தி கிளறின

எதிராளியின் குருதியில்
தம் உடலை முழுக்காட்டினதும்
இரு வேறிடத்தில் ஓய்த்து அமர்ந்தன


இப்போது யாரில் யார் உள்ளதென்பதே
யாரிடமாவது
வெற்றியை கொண்டு வரும்
வழி என்றாயிற்று