அன்னையே
உன் பாதப்பூவடிக்குள்
கூர்முட்கள் வைத்திருக்கிறாயா?
உன் பாதங்களில் ஒன்றையே நானறிவேன்
அதன் தடங்கள் ஒற்றியே
ஓர் கனவில்
உன் இடம் கண்டுணர்ந்தேன்
அங்கே
துயிலும் உன் குட்டிகளை
நான் தூக்கி வைக்க ஆகாதா?
இத்துணை தூரம் வந்தவன்
உன் குட்டிகளை
தொட்டு தடவி பார்க்க அறியாது
நிற்குதல் ஆகுமா !





